காந்திகிராம பல்கலைகழக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகை..!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்படி அருகே அமைந்துள்ளது காந்திகிராம பல்கலைகழகம். இப்பல்கலைகழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 36-வது பட்டமளிப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள வருகின்ற 11-ஆம் தேதி தமிழகம் வருகிறர். மேலும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் துரிதபடுத்தி வருகின்றன.