காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார் அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர்.
இந்தியர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள் . ஊடகங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறுப்பை பரப்பி விடுகிறது.
1980களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ அதுவே இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நடக்கிறது. கடவுளை விட தனக்கு எல்லாம் தெரியும் என்று மோடி நினைக்கிறார்.
கடவுளுக்கு அருகே அவரை உட்கார வைத்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார் என மோடியை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.