உடல்நிலை மோசமடைந்ததால் பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.