பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை: ஜெயக்குமார்!

பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இந்தியாவின் போதை தலைநகரமாக தமிழகம் உள்ளது. போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது திமுக அரசு. மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் திமுக தான். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்கை இன்னும் பிடிக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக் மாதிரி இன்று திமுகவில் நிறைய பேர் உள்ளனர்.

பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. இந்த மண் திராவிட மண். மோடியின் வருகையால் பாஜகவுக்கும் பலன் இருக்காது. தமிழக மக்களுக்கும் பலன் இருக்காது. வடக்கே இருக்கிற கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்காது. காங்கிரஸுக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. யார் வந்தாலும் அது வீணான முயற்சிதான்.” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News