இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். இவரது வருகைக்கு பிறகு, லட்சத்தீவின் சுற்றுலா வளர்ச்சி அடைந்திருப்பதாக, சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது கூறியுள்ளார்.
மேலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், பல்வேறு இடங்களில் இருந்து, சுற்றுலா குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு, லட்சத்தீவு சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-
“பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் செல்வாக்கு கொண்ட தலைவர். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லட்சத்தீவுக்கு வருகை தந்திருந்தார். இவர் வந்த பிறகு, இங்கு ஏற்பட்ட தாக்கம் என்பது பெரிய அளவில் உள்ளது.” என்று சுற்றுலா அதிகரி கூறியுள்ளார்.
“அவரது வருகைக்கு பிறகு, சுற்றுலா தொடர்பான விசாரணைகள் பலவற்றை, நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். லட்சத்தீவு சுற்றுலாத்துறை வழங்கக்கூடிய சுற்றுலா ஆஃபர்கள் பற்றி தெரிந்துக் கொள்ள பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.
“பல்வேறு வகையான சுற்றுலா செயல்பாடுகளை நாங்கள் நெறிப்படுத்தி வருகிறோம். ஸ்கூபா டைவிங் மற்றும் தண்ணீர் சம்பந்தமான விளையாட்டுகள் தான், லட்சத்தீவின் வருமானம் ஈட்டும் வழிகளாக உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.