இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆன்மீகவாதிகளில் ஒருவர் விவேகானந்தர். மேலும், இளைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் இருந்திருக்கிறார். இதனால், இவரது பிறந்த நாளானா ஜனவரி 12, தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சுவாமி விவேகானந்தருக்கு அவரது பிறந்த நாள் அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞர்களுக்கு அழிவில்லா உத்வேகமாக இருக்கக் கூடிய இவர், இளைஞர்களின் மனதில், ஆர்வத்தையும், நோக்கத்தை தொடர்ந்து ஒளிரவிட்டுக் கொண்டு இருக்கிறார். வளர்ந்த மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இவரது கனவை நிறைவேற்ற நாம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.