2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் இது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டால் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.
பட்ஜெட்டில் முதல் முறையாக ‘விஸ்வகர்மா’ பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்பான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்.