AI தான் உலகின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு செல்லப்போகிறது. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பல்வேறு நாடுகள், அதில் தங்களது நாடுகளை வலிமைப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், AI தொழில்நுட்பத்தால், வேலைவாய்ப்பின்மை, தவறாக பயன்படுத்துதல் போன்ற சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இவற்றை சரி செய்வதற்கான வழிகளை கண்டறிந்துவிட்டால், உலகின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில், AI உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
அப்போது, இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் தலையெழுத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் எழுதுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இதில் உள்ள அபாயங்களை களைந்து, இத்தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுகொள்வதிலும், தரவு தனியுரிமை குறித்த தொழில்நுட்ப சட்டத்தை வகுப்பதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூறினார்.