கிராமின் பாரத் மோட்சாவ் என்ற புதிய திட்டத்தை, தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டம், தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் என்ற பகுதியில், இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கிராமப்புறங்களில் அமைதியை நிலைநாட்ட நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “சாதி அரசியல் என்ற பெயரில், சிலர் அமைதியை சீர்குலைக்கின்றனர்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், “பாஜக அரசு, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது” என்றும் தெரிவித்தார்.