இலங்கையில் இருந்து இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் மூலமாக, ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து, தமிழகத்திற்கான 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி பேசியது பின்வருமாறு:-
“என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள்.
ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது”
இவ்வாறு அவர் கூறினார்.