புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி, நிறுவனர் ராமதாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், தொண்டர்களிடம் பேசிய ராமதாஸ், கட்சியின் புதிய இளைஞரணி தலைவர் முகுந்தன் என்று அறிவித்தார்.
ஆனால், இதில் உடன்படாத அன்புமணி, நடுவே குறுக்கிட்டு, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், ஆவேசம் அடைந்த ராமதாஸ், “இது என்னுடைய கட்சி. என் முடிவில் விருப்பம் இல்லாதவர்கள், கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம்” என்று பரபரப்பாக பேசினார்.
இதற்கு, “ சென்னை பனையூரில் உள்ள புதிய கட்சி அலுவலகத்தில், என்னை சந்திக்கலாம்” என்று கூறிவிட்டு, கட்சியின் அலுவலக முகவரியையும், தொண்டர்களுக்காக அன்புமணி கூறினார். முகுந்தன் என்பவர் அன்புமணியின் அக்கா மகன் என்பதும், அவர் கட்சியில் இணைந்து 4 மாதங்கள் தான் ஆனது என்றும், இந்த வாக்குவாதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவர்களது இந்த காரசார வார்த்தைப் போரால், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.