தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிட்டார். இதனால் இந்த தொகுதி நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. 11 சுற்றுகள் வரை பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார். பின்னர், 12-வது சுற்றில் இருந்து திமுக வேட்பாளர் மணி முன்னிலை பெறத் தொடங்கினார். நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தோல்வி அடைந்தது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 4.23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.