சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மேற்கு தொகுதி பாமக எம் எல் ஏ அருள் பங்குபெற்று மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மாணவ மாணவிகள் முன்னிலையில், திமுகவினர், எம்.எல்.ஏ தரப்பினரும் மாறிமாறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சைக்கிள் வழங்கிய பாமக நிர்வாகி அருள் திடீரென மாணவ மாணவிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மாணவர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் அருள், உங்கள் நலன் கருதிதான் விரைவாக விழாவை முடித்ததாகவும், மாணவர்கள் உங்கள் கண்முன்னே இப்படி ஒரு நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்பதாக கூறினார்.