பா.ம.க ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படம்.. புதிய அப்டேட்..

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்து வருபவர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான இவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உருவாக இருப்பதாக, சமீபத்தில் தகவல் ஒன்று பரவியது.

இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், சேரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படத்தில் இருந்து லைக்கா நிறுவனம் வெளியேறி இருப்பதாகவும், அதற்கு பதிலாக, தயாரிப்பாளர் தமிழ்குமரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News