Connect with us

Raj News Tamil

“வயநாட விட்டு ராகுல் காந்தி ஓடுவார்” – சாடிய பிரதமர் மோடி!

இந்தியா

“வயநாட விட்டு ராகுல் காந்தி ஓடுவார்” – சாடிய பிரதமர் மோடி!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கான, முதல் கட்ட நாடாளுமன்ற வாக்குப்பதிவு, நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று, இரண்டாம் கட்டமாக, 13 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் நந்தட் பகுதியில், பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி நெருங்கடியை சந்தித்து வருகிறார். ராகுல் காந்தியும், அவரது உதவியாளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அமீதி தொகுதியில் தெறித்து ஓடியது போல், வயநாடு தொகுதியை விட்டும் இவர் ஓடுவார்” என்று கூறியுள்ளார்.

( குறிப்பு:-

கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அமீதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில், ராகுல் காந்தி போட்டியிட்டார். ஆனால், ஸ்மிருதி இராணியை எதிர்த்து போட்டியிட்ட அமீதி தொகுதியில், ராகுல் காந்தி படுதோல்வி அடைந்தார். அதன்பிறகு, வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியே, அவரை எம்பியாக மாற்றியது. இதனால் தான், பிரதமர் மோடி அவ்வா விமர்சித்துள்ளார். )

தொடர்ந்து எதிர்கட்சியினர் குறித்து பேசிய அவர், “இந்தியா கூட்டணியின் தலைவர் யார் என்பதை கூட, அவர்களால் சொல்ல முடியாது” என்றும் விமர்சித்தார்.

மேலும், “காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், எதார்த்தம் என்னவென்றால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒத்துக் கொண்டுள்ளனர்.” என்று சாடினார்.

மகாராஷ்டிராவின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, “பத்து ஆண்டுகளாக, மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தடையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். இறுதியாக, மக்கள் அனைவரும் முடிந்த வரையில் வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

More in இந்தியா

To Top