சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது செல்போன் எண்ணிற்கு, மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜில், லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டு, மின் கட்டணம் செலுத்துவதற்கு, இந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அனந்தராமன், அந்த லிங்கை க்ளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார்.
உள்ளே நுழைந்த சில மணி நேரங்களில், வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 1.98 லட்ச ரூபாய், திருடப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னையை சேர்ந்த ஹரிஷ் என்பவரது மனைவியின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்துள்ளது. அதனை அவரும் க்ளிக் செய்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து, 1.30 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளையும் பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், ஹரியான மாநிலத்தை சேர்ந்த மஞ்சித் சிங்கும், நாராயண சிங்கும் தான், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்த போலீசார், திருடப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.