சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது நண்பர் ஒருவருடன் மது அருந்த, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வாகன தனிக்கையில் இருந்த காவல்துறையினர், சத்யராஜை பிடித்துள்ளனர். இருவரும் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டியதால், அவர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களை தடுத்த சத்யராஜ், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனது மனைவிக்கு செல்போனில் அழைப்பு விடுத்த அவர், சம்பவ இடத்திற்கு வர வைத்தார். இதையடுத்து, அங்கு வந்த சத்யராஜின் மனைவி அக்ஷயா, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், பணியில் இருந்து காவலர் ஒருவரையும், தாக்கினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சத்யராஜையும், அவரது மனைவி அக்ஷயாவையும், நண்பரையும் கைது செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறுவோர், அதற்கான அபராதத் தொகையை செலுத்தாமல், இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெரும் பிரச்சனைகளில் சிக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.