திருப்பத்தூர் அருகே, சட்டவிரோதமான முறையில் கரு கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர்கள் 2 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். மருத்துவ படிப்பை படிக்காத இவர், தனது மனைவி சுமங்கலியுடன் சேர்ந்து, கிளீனிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்த கிளீனிக்கில், பல்வேறு பெண்களுக்கு, சட்டவிரோதமான முறையில் கருகலைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக நலப் பணி துறையினர், அந்த கிளீனிக்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், கருகலைப்பு செய்யப்பட்டது உறுதியானதால், சுதாகர், சுமங்கலி ஆகியோரை காவல்துறையின கைது செய்தனர். மேலும், அந்த கிளீனிக்கிற்கும், சீல் வைக்கப்பட்டது.