அனுமதி இன்றி போராட்டம்.. வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்புக் குழுவினர் கைது..

ராணிப்பேட்டை அருகே, அனுமதியின்றி போராட்டம் நடத்திய இந்து அமைப்புகளின் நிர்வாகிகளை, காவல்துறையினர் கைது செய்தனர்.

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் மீது, தாக்குதல் நடத்திய சம்பவம், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, பல்வேறு இந்து அமைப்புகள், இன்று போராட்டத்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் முன்பு, வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டம் நடத்திய அவர்களை , கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News