“எனக்கு Periods.. முதலிரவு வேண்டாம்” – பொய் சொல்லி ஆட்டைய போட்ட மணப்பெண்!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, திருமணத்திற்கான புரோக்கர் ஒருவரை பிடித்து, தனது மகனுக்கு பெண் பார்க்க சொல்லியுள்ளனர். அந்த புரோக்கரும், இளைஞருக்கு பிடித்த வகையில் உள்ள பெண்ணை தேடி கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார்.

அந்த பெண்ணும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால், மாப்பிள்ளை வீட்டார் உடனே திருமணத்தை தடபுடலாக நடத்தியுள்ளனர். திருமணம் முடிந்து, முதலிரவு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்றும், 4 நாட்களுக்கு முதலிரவு வேண்டாம் என்றும், அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட இளைஞர், மனப்பெண்ணிடம் இருந்து விலகி இருந்து வந்துள்ளார். இந்நிலையில், திருமணமாகி ஒரு வாரம் கழித்து, திடீரென மனப்பெண் மாயமாகியுள்ளார். அவருடன் சேர்ந்து, வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகளும், ரூ.3 லட்சம் பணமும் மாயமாகியுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், அந்த புரோக்கரிடம் இதுகுறித்து கேட்பதற்கு, வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, அந்த மணப்பெண்ணும், புரோக்கரும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.

அதன்பிறகு தான், இவர்கள் இருவரும் சேர்ந்து, கொள்ளை அடிப்பதற்காக, இந்த திருமண நாடகத்தை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News