கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரம் பகுதியில், மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தவர் ரவி. இவரது மகளான ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே மெக்கானிக் ஷாப்பில் பணியாற்றி வந்த சுப்ரமணியன் என்ற இளைஞருக்கும், இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக தனிமையில் இருந்துள்ளனர். இவ்வாறு இருந்த நிலையில், ரம்யாவை கழட்டிவிட நினைத்த சுப்ரமணியன், வீட்டில் பார்த்த இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, மார்ச் மாதம், சுப்ரமணியனுக்கும், அந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை அறிந்த ரம்யா, காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் பதறிய சுப்ரமணியன், புகாரை வாபஸ் பெற்றால், திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண், புகாரை வாபஸ் பெற்றார். சுப்ரமணியனும், சொன்னது போலவே, ரம்யாவை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமணம் நடந்து நான்கே நாட்களில், ஏற்கனவே நிச்சயம் செய்து வைத்திருந்த பெண்ணை, கோவிலில் திருமணம் செய்ய முயன்றார்.
இதனை அறிந்த ரம்யா, மீண்டும் காவல்துறையில் புகார் அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், மணக்கோலத்தில் இருந்த சுப்ரமணியனை கைது செய்தனர். முதல் திருமணம் நடந்து நான்கே நாட்களில், இன்னொரு பெண்ணை இளைஞர் 2-வது திருமணம் செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.