Connect with us

Raj News Tamil

நடிகர் விஜய்-க்கு காவல் ஆணையம் நோட்டீஸ்…பாடலால் தொடரும் பிரச்சனை

சினிமா

நடிகர் விஜய்-க்கு காவல் ஆணையம் நோட்டீஸ்…பாடலால் தொடரும் பிரச்சனை

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் சமூக ஆர்வலர்களிடம் கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் விஜய்-க்கு தாங்கள் அளித்த அரசியல் ரீதியான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தனர்.

தற்போது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் படி, நடிகர் விஜய்யின் மீதும் அந்த பாடலில் சம்மந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில், விஜய்-க்கு எதிராக புகார் அனுப்பியதால், அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாக ஆர்.டி.ஐ செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த புகார் தொடர்பாக நடிகர் விஜய்-க்கு காவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top