பிரபல தமிழ் சினிமா நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவிக்கும், நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.