லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சமூக வலைதளத்தில் வெளியிடபட்டது. ட்ரைலர் வெளியாகி சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது.
இந்நிலையில் லியோ படக்குழு மீது இந்து மக்கள் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிரெய்லரில் நடிகர் விஜய், ஆபாச வார்த்தை பேசுவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி, காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக பொறுப்புடன் செயல்படாமல் இப்படிபட்ட வார்த்தைகளையெல்லாம் நடிகர் விஜய் பயன்படுத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லியோ படத்தின் ‘நான் ரெடி தான்’ பாடலும் பல சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.