மும்பையில் உள்ள வாஷி என்ற பகுதியை சேர்ந்தவர் ஊர்வசி. பாரில் வேலை பார்த்து வரும் இவருக்கும், அந்த பாருக்கு கஷ்டமராக வந்த ரியாஸ் கான் என்பவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி, ஊர்வசி கேட்டுள்ளார்.
ஆனால், ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளதால், ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரியாஸ் கானை மிரட்டிய அந்த பெண், காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊர்வசியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
தன்னுடைய நண்பன் இம்ரான் ஷேக் உதவியுடன் ஊர்வசியை கொலை செய்த அவர், அந்த உடலை, தாம்னி என்ற கிராமத்தில் ஓடும் ஆற்றில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிவந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், அந்த பெண் யார் என்பது கூட தெரியாமல், குழம்பியுள்ளனர்.
இறுதியில், அந்த பெண் அணிந்திருந்த செருப்பில், கடை ஒன்றின் பெயர் இருந்துள்ளது. அந்த கடையில் விசாரித்தபோது, ரியாஸ் கானும், ஊர்வசியும், ஒன்றாக செருப்பு வாங்கிய சிசிடிவி கிடைத்தது. அதன்மூலம் நடத்தப்பட்ட முறையான விசாரணையில், உண்மை அனைத்தையும், போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, ரியாஸ் கானையும், அவரது நண்பன் இம்ரான் ஷேக்கையும், போலீசார் கைது செய்துள்ளனர். வெறும் செருப்பை மட்டுமே வைத்து, கொலை வழக்கை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.