பதுக்கி வைக்கப்பட்ட கள்ளச்சாராயம்.. தேடி வந்து கண்டுபிடித்த போலீஸ்..

குடியாத்தம் அருகே, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மலை பகுதிகளில், சாராயம் காய்ச்சுவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு சிறப்புப் பிரிவை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், அப்பகுதியில், சோதனை மேற்கொண்டார்.

அப்போது, சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்கள், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 800 லிட்டர் கொள்ளவு கொண்ட அந்த சாராய ஊறல்களையும், 120 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், காவல்துறையினர் அழித்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருந்தவர்களை, தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு வந்த ஈச்சர் வாகனத்தை மறித்து பரிசோதனை செய்ததில், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்வது, கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகன ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், அந்த போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

RELATED ARTICLES

Recent News