தம்பியை சிறைக்கு அனுப்பிய திமுக நிர்வாகி.. கொலை செய்த அண்ணன்..

சிவகங்கை அருகே, தம்பியை சிறைக்கு அனுப்பியதற்கு காரணமாக இருந்த திமுக நிர்வாகியை, அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாமியார் பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், திமுகவின் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

இவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர், இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று 3 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் விக்கி என்பதும், அவரது தம்பி சிறைக்கு சென்றதற்கு, பிரவீன் குமார் தான் காரணம் என்பதும் தெரியவந்தது.

இந்த முன்விரோதம் காரணமாக தான், விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து, திமுக நிர்வாகியை கொலை செய்திருப்பது, தெரியவந்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் தொடர் விசாரணையில், ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News