கோவில்பட்டி அருகே, 2 வெவ்வேறு இடங்களில், 25 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை, காவல்துறை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி பகுதியில், கஞ்சா கடத்துவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில், 4 பேரை பிடித்து விசாரித்த காவல்துறையினர், அவர்களிடம் 23.750 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பாரதி நகர் பகுதியில் கஞ்சர் கடத்திய 2 பேரையும், காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.