புதுச்சேரி பாஜக இளைஞரணி துணை தலைவர் கொலை – போலீஸ் விசாரணை

புதுச்சேரி அருகே, பாஜக இளைஞரணி துணை தலைவரை கொலை செய்த மர்ம கும்பலை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரியின் சரித்திர பதிவேடு குற்றவாளிகளில் ஒருவர் உமா சங்கர். பாஜகவின் மாநில இளைஞரணி துணை தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர், இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு பயணித்துள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News