ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் கடத்தல்.. குற்றவாளிகள் கைது..

கூடன்குளம் அருகே, இலங்கைக்கு கடத்த இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் கூடன்குளம் பகுதியில் இருந்து, இலங்கை நாட்டிற்கு, பீடி இலைகள் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை நாட்டிற்கு கடத்துவதற்காக, லோடு வண்டியில் எடுத்து வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை, காவல்துறையினர் கைது செய்ததுடன், பறிமுதல் செய்த பீடி இலைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

RELATED ARTICLES

Recent News