மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இந்து மக்கள் கட்சியின் தென்மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் இவர், நகைக் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனியாக செல்லும்போது, வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், இவருக்கும், ஜெய்ஹிந்த்புரம் தலைமை குற்றப்பிரிவு காவலர் ஹரிஹரணுக்கும் இடையே பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும், மணிகண்டன் நகைக் கடை தொடங்குவதற்கு ஹரிஹரன் கடனாக பணம் வழங்கியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் பணத்தைத் திருப்பி தராமல் இருந்த மணிகண்டன், ஹரிஹரனின் மனைவியுடனும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கோபம் அடைந்த ஹரிஹரன், கூலிப்படையை ஏவி, அவரை கொலை செய்துள்ளது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமை காவலர் ஹரிஹரன் உட்பட 6 பேரை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.