கடற்கரையில் நாயுடன் வாக்கிங்.. திடீரென தகராறு.. 3 படகுகள் சேதம்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு..

நெல்லை அருகே, நாயை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது ஏற்பட்ட தகராறு குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர், தனது வளர்ப்பு நாயை, கடற்கரையோரமாக நடைபயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே, நாயை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில், ஜான்சனின் ஆதரவாளர்கள், மணிகண்டனின் நண்பர்களை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அங்கிருந்த 3 படகுகளையும் அவர் சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News