தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி..!

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5 – இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் பாதுகாப்பு கருதி இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் இயக்கம் மேல்முறையீடு செய்தது. பின்னர் இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அரசே முடிவு எடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, அந்தந்த மாவட்டங்களின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைக்கு ஏற்றவாறு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.