போலியான தகவலை பரப்பிய அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது கடலூரில் கோமதி என்ற பெண்ணை திமுக கூட்டணிக்கு வாக்களிக்காததால் அவரை அடித்து கொலை செய்யப்பட்டதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின்போது ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கோமதி (45) என்பவர்களுக்கும், திமுக பிரமுகர்களான சேதுராமன் மகன் ரவி, அவரது ஆதரவாளர் கலைமணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிக்கவில்லை என்பதற்காக திமுக.,வினர் இந்த பாதக செயலை செய்திருப்பதாக’ தவறான தகவலை பரப்பியுள்ளார்.

பெண் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து தெரிவித்ததாக அண்ணாமலைக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

RELATED ARTICLES

Recent News