ஒரே ஒரு வார்த்தையின் மூலம் நகையை மீட்ட போலீஸ்.. நடுங்கிய திருடன்.. கண்கலங்கிய பெண்..

ஒரே ஒரு வார்த்தையை நாசுக்காக பயன்படுத்தி, திருடு போன தங்க தாலியை, போலீசார் மீட்ட சம்பவம், சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், உதவியாளராக பணியாற்றி வருபவர் உஷா. இவர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, தான் அணிந்திருந்த தங்க தாலியை காணவில்லை என்று கூறியிருந்தார்.

இதனை அறிந்த காவல்துறை ஆய்வாளர் இசக்கி பாண்டியன், ஆரம்ப சுகாதார மைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், “யார் நகையை திருடினீர்களோ, அவர்களே அந்த அறையில் வைத்துவிடுங்கள்.

அதற்கு பதிலாக நாங்களே கண்டுபிடித்தால், கடும் நடவடிக்கை எடுப்போம். வேலையை இழக்க நேரிடும்” என்று எச்சரித்தார். அடுத்த நாள் அந்த அறையில் சென்று பார்த்தபோது, திருடுப்போன தாலி, தரையில் கிடந்துள்ளது. பின்னர், அந்த தாலியை உஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.