உளுந்தூர்பேட்டை அருகே, மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றுப் பகுதியில், காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, 10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்த சிலர், மணல் திருட்டில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த காவல்துறையினர், அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், காவல்துறையினர் வருவதை தெரிந்துக் கொண்ட மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பித்துவிட்டனர். இதையடுத்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் இறுதியில், மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ச்சியாக நடந்து வரும் மணல் திருட்டு சம்பவங்களை, காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.