நரிக்குறவர் விவகாரம் – ரோஹிணி திரையரங்கம் மீது அதிரடி நடவடிக்கை!

சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இந்த படம் உலகம் முழுவதும் நேற்று பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இந்த படத்தின் சிறப்புக் காட்சி, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது.

அப்போது, நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், டிக்கெட் வாங்கிக் கொண்டு, படத்தை பார்க்க உள்ளே சென்றனர். ஆனால், அவர்களின் சாதியை காரணம் காட்டி, படம் பார்க்க உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த விவரம் குறித்து விளக்கம் அளிக்க, ரோகிணி திரையரங்கிற்கு, காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், சிறப்புக் காட்சி நடத்துவதற்கு முறையான அனுமதி கோரப்பட்டது என்றும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன பெண்களிடமும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News