தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

பாஜக விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக ஹரீஷ் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக பிரமுகர் அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.