சேலம் மாரியம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
சேலம் பழைய சூரமங்கலம் ஜங்ஷன் சாலையில் கடைவீதி மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலை சுற்றி ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளுக்கு ஆக்கிரமிப்புக் கடைகள் இடையூறாக உள்ளன.
இது குறித்த புகார்கள் மீது காவல்துறையினர் மெத்தனமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கடைகளை அகற்றக் கோரி கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடையூறாக உள்ள கடை உரிமையாளர்களுடன் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் போலீசர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். எனினும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.