கையில் கத்தியுடன் ரீல்ஸ்.. குட்டிப் புள்ளிங்கோவை குமுறிய போலீஸ்.. கவனிப்பு நல்லா இருந்ததா?

கலர் கலராக முடி, சட்டைக்கு சம்பந்தமே இல்லாத பேன்ட், எங்கு சென்றாலும் கூச்சல்.. இவை தான் புள்ளிங்கோ என்று அழைக்கப்படும் இளைஞர்களின் அடையாளம். அது அவர்களது தனிப்பட்ட உரிமை என்று ஒரு புறம் கூறி வந்தாலும், சில நேரங்களில் அது மற்றவர்களை எரிச்சல்படுத்தும் அளவிற்கு செல்லும் சம்பவங்களும் நடந்துக் கொண்டு தான் உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள அஸ்தினாபுரத்தை சேர்ந்த 3 இளைஞர்கள், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. புள்ளிங்கோ என்று அழைக்கப்படும் இவர்கள், கையில் கத்தியை வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் வகையிலான ரீல்ஸ்-களை, அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

படிக்க வேண்டிய வயதில், தங்களை ரவுடிகளை போல் பாவித்துக் கொள்ளும் இவர்கள், அதுதான் கெத்து என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இந்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியாவதை கவனித்த சில சமூக ஆர்வலர்கள், அந்த இளைஞர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

அதன்பேரில், அவர்களை பிடித்த காவல்துறையினர், “இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிடக் கூடாது” என்று தங்களது பாணியில் எச்சரித்து அனுப்பி வைத்தனர். முடியை வித்தியாசமாக வெட்டிக் கொள்வதும், விதவிதமான விநோத ஆடைகளை அணிவதும் அவர்களது தனிப்பட்ட விருப்பங்களாக இருக்கலாம்.

ஆனால், சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் வீடியோவை வெளியிடுவதும், ரவுடிகளை போல் தங்களை பாவித்துக் கொள்வதும், அந்த இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்று தான் கூறவேண்டும்…

RELATED ARTICLES

Recent News