முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்.. தலைவர்கள் வாழ்த்து..

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமானவர் மு.க.ஸ்டாலின். இவர், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதன்காரணமாக, இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம், அண்ணா நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவின் முக்கிய நிர்வாகிகள், இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தங்களது வாழ்த்துக்களை, சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செல்போன் வாயிலாக, முதலமைச்சருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News