“இந்த பட்ஜெட் அரசியலுக்கானதாக இல்லாமல் இருந்திருந்தால்..,” – சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

பாஜகவின் ஆட்சியின் கீழ் தொடர்ச்சியாக நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், பீகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதனை, இண்டியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. டிம்பிள் யாதவ், ஏ.என்.ஐ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், “அரசியலும், பட்ஜெட்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது. இது அரசியலுக்கானது என்று இல்லாமல் இருந்திருந்தால், ஆந்திரா பிரதேசத்திற்கும், பீகாருக்கும் சிறப்பு சலுகைகள் நிச்சயம் வழங்கப்பட்டிருக்காது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “உத்தரபிரதேச மாநிலம், பாஜகவிற்கு தொடர்ச்சியாக பல்வேறு எம்.பி தொகுதிகளை கொடுத்திருக்கிறது. வரலாற்றில், இதுவரை எந்தவொரு கட்சியும் பல்வேறு தொகுதிகளை உத்தரபிரதேசத்திறல் வென்றதில்லை. எனவே, மத்திய நிதியில் இருந்து, உத்தரபிரதேசத்திற்கு தான் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து சில பாசிட்டிவ்வான கருத்துக்களையும் அவர் வெளிப்படுத்தினார். அதுகுறித்து பேசும்போது, “அமிர்தசரஸ்- கொல்கத்தா தொழில்துறை சாலை அமைத்தல் திட்டத்தை பொறுத்தவரை, பீகாரில் உள்ள காயா பகுதியில், தொழில்துறை வளர்ச்சி அடைவதை நாங்கள் வரவேற்கிறோம்.

மேலும், சாலை இணைப்பு திட்டங்களான, பாட்னா- பூர்னியா விரைவுச் சாலை, பக்ஸர்-பகல்பூர் விரைவுச்சாலை, போத்காயா-ராஜ்கிர்-வைஷாலி-துர்பங்கா மற்றும் பக்ஷர் பகுதியில், கங்கை ஆற்றை சுற்றி அமையவுள்ள இரண்டு பாதை மேம்பாலப் பணிகள், 26 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட இருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.

“பீகார் மாநிலத்தில் உள்ள பிர்பைண்டி பகுதியில், 2400 மெகாவாட்டில் மின் ஆலை அமைப்பது உள்ளிட்ட ஆற்றல் சம்பந்தமான திட்டங்கள், 21 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதற்கும், நாங்கள் ஆதரவளிப்போம்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News