பாஜக 370-400 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திய கருத்துக் கணிப்பாளர்கள் தங்கள் செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
மக்கள்தான் அதிகாரம் மிக்கவர்கள் என்பதை இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இருக்கும் வாக்களிக்கும் சக்தி, யாரையும் உருவாக்கக்கூடியது. அதேபோல், யாரையும் ஒன்றுமில்லாமல் செய்யக்கூடியது” என்றார்.
பாஜகவுக்கு 370-400 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பாளர்கள் கூறினார்கள். இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியதற்காக இந்த கருத்துக்கணிப்பாளர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.