திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இன்று தான் பிறந்த நாள். அவர் இன்று தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு பொன்னார் தற்போது சைலண்ட் மோடில் இருந்து வருகிறார்.
மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.