பொங்கல் விழா: தமிழ் பாரம்பரிய முறையில் கொண்டாடிய பிரதமர் மோடி!

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்து பங்கேற்றார்.

விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளிக்கிறார்.

தமிழகத்தில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.

அவர், பொங்கல் வாழ்த்துகளை தமிழில் தெரிவித்ததோடு, ‘தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற திருக்குறளை மேற்கொள்காட்டிப் பேசினார்.

RELATED ARTICLES

Recent News