ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத 14-ஆம் தேதியில் இருந்து 4 நாட்கள், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை, தமிழர் திருநாளாக இருப்பதால், தமிழக அரசு சார்பில், பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும்.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது வழங்கப்படும்? அதற்கான டோக்கன் எப்போது விநியோகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 3-ஆம் தேதி முதல், டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும், அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு சென்று, பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகுப்பில், ஆயிரம் ரூபாய் பணமும் சேர்த்து வழங்கப்படுமா? என்பதை, அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.