பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகள் தீயில் எரிந்து நாசம்..!

பொங்கல் பண்டிகைக்காக கொடுக்க வைத்திருந்த இலவச வேட்டி சேலைகள் தீயில் எரிந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய 29,000 சேலை, 19,000 வேட்டி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

RELATED ARTICLES

Recent News