ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
மேலும், இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி, கடந்த 3-ஆம் தேதியில் இருந்து தொடங்கி, நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயணாளிகளுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா, எம்.பி என்று பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நியாய விலைக் கடைகளில், வரும் 13-ஆம் தேதி வரை, பொங்கல் பரிசுத் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.