அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி!

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அமலாக்கத் துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரியில் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சர் வீட்டில் விசாரணை நடத்தினால், முழுமையான தகவல்களை வெளிக்கொணர்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அமலாக்கத் துறையினர் தங்கள் அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடியை அழைத்துச்சென்ன்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரின் சொந்த காரிலேயே அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றனர்.

RELATED ARTICLES

Recent News