பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பரில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் இப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.